சீனாவில் எரிபொருள் பவுசர் வீதியில் வெடித்து சிதறியதில் 18 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஸேஜியாங்(Zhejiang) மாகாணத்தின் வென்லிங்(Wenling) நகரில் நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
நெடுஞ்சாலையொன்றில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் பவுசர் வெடிப்புக்குள்ளானதால் அருகிலிருந்த வீடுகள், தொழிற்சாலைகள் இடிந்தன, பாரிய தீ பரவி பல வாகனங்களும் தீக்கிரையாகின.
காயமடைந்த 189 பேர் தொடரந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சீன அவசரநிலை முகாமைத்துவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திரவநிலை வாயுவை ஏற்றிச்சென்ற பவுசர் வாகனமே இவ்வாறு வெடிப்புக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்












No comments