Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆசிரியரை நிர்வாணமாக்கி மிரட்டிய, மாணவ காதல் ஜோடி உட்பட மூவர் கைது.


ஆசிரியரான ஆண் ஒருவரை பிரத்தியேக வகுப்பு நடத்த வருமாறு வீட்டுக்கு அழைத்து, கத்திமுனையில் மிரட்டி, நிர்வாணமாக்கி படம்பிடித்து, கப்பம் கோரிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவி ஒருவரையும் அவரின் காதலனையும் எகிப்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

55 வயதான பௌதீகவியல் ஆசிரியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எகிப்தின் மத்தியதரைக்கடல் கரையோர நகரான அலெக்ஸாண்ட்ரியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆசிரியரை உயர்தர பாடசாலையைச் சேர்ந்த பதின்ம வயது மாணவியும் 16 வயதான அவரின் காதலனும், காதலனின் வீட்டுக்கு பிரத்தியேக வகுப்பு நடத்த வருமாறு அழைத்தனர்.

அவ்வீட்டில் வைத்து, மேற்படி சிறுவன் கத்திமுனையில் ஆசிரியரை மிரட்டி, அவரின் ஆடைகளை களையச் செய்தான். பின்னர் மாணவியின் உடல் மீது ஆசிரியரின் கையை வைப்பற்கு நிர்ப்பந்தித்து வீடியோ படம் பிடித்தான் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மேற்படி வீடியோவை முச்சக்கர வாகன சாரதியான 20 வயது நண்பரிடம் அவன் வழங்கி, ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து, ஒரு இலட்சம் எகிப்திய பவுண்ட்ஸ், (சுமார் 11.4 இலட்சம் இலங்கை ரூபா) கோருமாறு ஆலோசனை கூறினான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி, அவரின் காதலனுடன் முச்சக்கர வாகன சாரதியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் அவர்கள் மூவரிடமிருந்து தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இம்மூவரையும் 45 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments