Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் தேர்தல் ஒத்திகை.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. 

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது என்பதை ஆராய்வதற்காக இந்த வாக்களிப்பு ஒத்திகை இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு ஒத்திகை நண்பகல் 12 மணிவரை நடைபெற்றது. 

இதன்போது சமுக இடைவெளியைப் பின்பற்றி, கைகள் சுத்தம் செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வாக்களிப்பு ஒத்திகையின் போது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக, யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன், யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், பொலிஸார், சுகாதார துறை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






No comments