கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை, அதிகாரிகளினால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் போது நீர் கொழும்பு சிறைச்சாலை சிறை கூடங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள் , அதற்கான சார்ஜர்கள் , சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டன.
இந்த நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தண்டனை கைதியாக உள்ள ஒஸ்டின் எனும் போதை பொருள் கடத்தல் குற்றவாளியின் சிறை கூடத்தில் குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆடம்பரமான படுக்கை என்பன மீட்கப்பட்டன. அதேபோன்று இந்தியவை சேர்ந்த போதை பொருள் வியாபாரியான குற்றவாளியின் சிறை கூடத்திலும் "மைக்ரோ அவன்" உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோன்று மற்றைய பெரும் குற்றவாளிகளின் சிறை கூடங்களிலும் அவர்கள் வசதியான வாழ்வை வாழ்ந்து வந்தமை சோதனையிட்ட அதிகாரிகள் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேவேளை போதை பொருள் கடத்தல் குற்றவாளியான பெண் ஒருவரும் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கால பகுதியில் கர்ப்பம் அடைந்துள்ளார். அவரை சிறைச்சாலை அதிகாரிகள் வெளியில் அழைத்து சென்று காதலனை தனிமையில் சந்திக்க அனுமதித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமடைந்தார் எனவும், பின்னர் அதனை அழித்தார் எனவும் அது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகளவான பணம் குற்றவாளிகளால் மாதாந்தம் வழங்கப்பட்டே குற்றவாளிகள் சிறை கூடத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் , அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் :- நன்றி aruna.lk















No comments