Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்று திருமணம் - கடலில் உயிரிழந்த மணமகன்.


களுத்துறை கட்டுக்குருந்தை பகுதியில் நேற்று (14) கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன  நபர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

களுத்துறை ரஜாவத்தை வீதி, கமகொடை பகுதியில் வசிக்கும் 26 வயதான அலகேஸ்வர லசித் கசுன் சில்வா என்பவரே  இன்று (15) காலை பயாகலை பகுதியில் சடலமாக  கரையொதுங்கிய நிலையில் பயாகலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.  

களுத்துறை கட்டுக்குருந்தை பகுதியில் தனது நண்பர், நண்பிகள் ஆறு பேருடன் கடலில் குளிக்க சென்றபோதே பாரிய கடல் அலையில் சிக்கி இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த நபர் இன்று (15) திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் அதனைக் கொண்டாடும் வகையிலேயே நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments