Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைத்தது முன்னணி.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments