Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பெண்களுடன் சேட்டை புரிந்தவர்களை ஊரவர்கள் நயப்புடைத்தனர்.


யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை விட்டார்கள் என நான்கு இளைஞர்கள் மீது ஊரவர்கள் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் , இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். 

யாழ்.கலட்டி பகுதியில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் இளைஞர் கூட்டம் ஒன்று அவ்வீதி வழியாக தனிமையில் செல்லும் பெண்களுடன் தகாத முறையில் நடக்க முற்படுவதுடன் , சேட்டைகளை புரிந்து வந்துள்ளனர். 

இளைஞர்களின் அந்த செயலை ஊரவர்கள் நீண்ட நாட்களாக அவதானித்து வந்த நிலையில் , இது தொடர்பில் பொலிசாரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். பொலிசாரும் விரைந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வழமை போன்று அப்பகுதியில் கூடிய இளைஞர் கூட்டம் பெண்களுடன் சேட்டை புரிந்த வேளை , ஊரவர்கள் ஒன்று கூடி இளைஞர் கூட்டத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

அத்தாக்குதலில் நான்கு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments