Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தொழிற்தகைமை பாடநெறிகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


க.பொ.த. உயர்தரத்தின் தொழில்துறைப் பாடத்துறையின் கீழ் மாணவர்களைத் தரம் 12இல் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2020ம் ஆண்டிலிருந்து தொழில்துறைப் பாடத்துறை செயற்படுத்தப்படும் 423 பாடசாலைகளில் உட்சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

உரிய பாடசாலைகளின் பட்டியலை இங்கு பெற்றுக் கொள்ளவும்Download
இப்பாடத்துறைக்கு மாணவர்களை உட்சேர்க்கும்போது அவர்கள் க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தி பெற்றனரா இல்லையா என்பதைக் கவனத்திற் கொள்ளத் தேவையில்லை.

நாடுமுழுவதும் அனைத்து வலயக் கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் தரம் 12 இற்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனைத்தவிர http://www.moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=654:advanced-level-vocational-stream-thirteen-years-guaranteed-education-programme-call-for-applications-for-grade-12-admissions-2020&catid=8:special-notices&lang=ta&Itemid=244 எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments