தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான கலந்துரையாடல் இன்று மாலை மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
தமிழ் அரசுக் கட்சியில் 7 வேட்பாளர்களும் புளெட் அமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் மற்றும் ரேலோவைச் சேர்ந்த ஒருவருமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது அதிக ஆசனங்களை பெறும் வகையில் செயல்படும் வழிவகைகளும் தற்போதைய கோரோனா அச்ச சூழலில் சுகாதார வழிகாட்டல்களுடன் மக்கள் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணங்கள் தொடர்பாக கூட்டம் நிறைவுற்றதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
No comments