கரவெட்டி பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
“சந்தேக நபர்களிடமிருந்து சுயேட்சைக் குழு வேட்பாளர் முருகேசு சந்திரகுமாரின் 270 தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்” என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.









No comments