வல்லை. இராணுவ முகாமுக்கு அருகில் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றசாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அது குறித்து நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

அதேவேளை வல்லை இராணுவ முகாம் பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் முகாமுக்கு முன்பாக வீசி சென்ற மர்ம பொதியை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி தரமுடைய இராணுவ அதிகாரியும் அவருடன் பாதுகாப்புக்கு சென்ற இரு இராணுவ வீரர்களும் அந்த பொதியை பரிசோதித்த போது அது வெடித்ததில் மூவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் இந்த தகவலை இராணுவத்தினர் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் வல்லை வீதி ஊடான போக்குவரத்தில் ஈடுபட்டோரின் விவரங்களை சீசீரிவி கமரா பதிவுகளை வைத்து ஆராய்ந்த இராணுவத்தினர், நேற்று காலை நீர்வேலி பூதர்மடத்தடியில் சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டு 25 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முற்படுத்தினர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்புகளால் எந்தவொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேக நபரை நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைத்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

No comments