Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேருந்து நிலைய துப்பரவு பணிக்கான ஒப்பந்தம் - 30 இலட்ச ரூபாய் லஞ்சம் கோரிய பிரதி முதல்வர் கைது


தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

30 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டபோதே  கைது செய்யப்பட்டுள்ளார். 

குருணாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் பொது மலசலக்கூடத்தைத் துப்புரவு செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக  பிரதி மேயர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபா மற்றும் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதம் கோரப்பட்டுள்ளதுடன், அதில் முதற்கட்டமான 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோதே பிரதி முதல்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பிரதி முதல்வரை நாளைய தினம் சனிக்கிழமை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவான இவர், பின்னர் சபையில் ஆட்சியமைப்பதற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதையடுத்து பிரதி முதல்வராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் , இன்றைய தினம் பிரதி முதல்வர் லஞ்சம் வாங்க முற்பட்ட நிலையில் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments