ஒவ்வொரு மாணவருக்கும் விடுதிகளில் தனி அறையை வழங்க முயற்சிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முடிந்தவரை தங்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். இரவு 7 மணிக்குப் பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து மருத்துவ பீடங்களின் இறுதி ஆண்டு தேர்வுகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும்” என்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
No comments