தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளன.
இதேவேளை, சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 72 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் மரணித்துள்ளனர்.
சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக 2 ஆயிரத்து 495 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், 3 ஆயிரத்து 51பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 979 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









No comments