Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் உயிரிழப்பு



எத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அந்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஏறக்குறைய 166 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 145 பொது மக்களும் 11 பாதுகாப்பு பிரிவினரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட ஏனைய 10 பேரும் எத்தியோப்பியாவில் தலைநகரில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் 167 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான முறையில் உள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில், 1084 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எத்தியோப்பாவின் மிகப்பெரிய இனக்குழுவான ஒரோமோ இனத்தை சார்ந்த பிரபலமான பொப் இசைப் பாடகரான ஹாக்காலு ஹான்டீசா, கடந்த திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்தே நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments