இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 5பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 810பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 296 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் தற்போது 503பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது









No comments