Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அமெரிக்க கடற்படை கப்பலில் வெடி விபத்து: 21பேர் காயம்!


சான் டியாகோவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் தரித்துவைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட, வெடி மற்றும் தீ விபத்தில் 21பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் கப்பலான, யு.எஸ்.எஸ். போன்ஹோம் ரிச்சர்ட் (USS Bonhomme Richard), சொந்த தளத்தில் பராமரிப்புக்காக துறைமுகத்தில் இருந்தபோது, உள்ளூர் நேரப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 15:30 GMT இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளூர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு பதினேழு மாலுமிகள் மற்றும் நான்கு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்டகனில் அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் சார்லஸ் பிரவுன் கூறுகையில், ‘காயமடைந்த மாலுமிகள் பெரும்பாலும் புகையை உள்ளீர்த்தல் மற்றும் சிறிய தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த நேரத்தில் சுமார் 160 மாலுமிகள் கப்பலில் இருந்தனர். அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்’ என தெரிவித்தார்.

கப்பல் பொதுவாக சுமார் 1,000 பேர் கொண்ட ஒரு குழுவைக் கொண்டு செல்வதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

No comments