Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹிந்தி திரையுலகை உலுக்கும் கொரோனோ -நடிகர் அனுபம் கெர் குடும்பமும் பாதிப்பு!


பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் நான்கு பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதனால்  அவரை நாங்கள் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

எனது சகோதரர்,  அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தபொழுதும்  அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர்.

இதேபோன்று  எனக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அனுபம் கெர் தமிழில் வி.ஐ.பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதுடன், பல குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments