Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3 மில்லியனைக் கடந்தது!


அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்துள்ளது.

அதேநேரம் இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடிய கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் உலக நாடுகளில் நாளாந்தம் அதிகரித்தேச் செல்கிறது.

இந்த வைரஸ் காரணமாக உலகளவில் ஒரு கோடியே 17 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 5 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்துள்ளது.

அங்கு கடந்த 24 மணிநேரத்தில் இந்த வைரஸ் தொற்று காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30 இலட்சத்து 40 ஆயிரத்து 833 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்றிலிருந்து இதுவரையில், 13 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம் 15 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதோடு, அவர்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments