வன்முறைக் கும்பல்கள், சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் கிடைக்கும் வருவாய் குறித்து முறைப்பாடுகளை வழங்க இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி 1997 மற்றும் 1917 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்கள், மணல் உள்ளிட்ட கனிய வளங்களை சட்டத்துக்குப் புறம்பாக அகழ்தல் – கடத்தல் உள்ளிட்டவை தொடர்பில் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை வழங்கினால் பொலிஸார் உடனடியாகவே நடவடிக்கை எடுப்பர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக துரித பொலிஸ் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படுகிறது.
No comments