Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி - காவடி உள்ளிட்ட பலவற்றுக்கு தடை!


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பங்கேற்க கூடிய பக்தர்களை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியளிக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.

அங்கப்பிரதஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த சிறப்பு அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்படி தீர்மானத்மை பதில் முதல்வர் அறிவித்தார்.

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments