Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு


வடக்கில் கடந்த 7 மாதங்களில்  2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 


வடக்கு மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த 7 மாதத்தில் அதிகளவிலான போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு 2096 kg கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் இவ் வருடம் இன்றையதினம் வரை  2327 kg கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமான ஒரு விடயமாகும் இதனை கருத்தில் கொண்டு சிவில் அமைப்புக்கள் மத குருமார் மற்றும் சமூக ஆர்வலர்கள்  வடக்கு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்

ஏனெனில் இளம்  பராயத்தை சேர்ந்தவர்கள் அதாவது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கூடுதலாக இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதை அவதானிக்க முடிகின்றது

 இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம்  அனைத்து சமூக மட்ட பிரதிநிதிகளுக்கும் உள்ளது எனினும் கடற்படையினரால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதேபோல சமூகமட்ட அமைப்புகளும்  போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.  

No comments