Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முககவசம் அணியாதோருக்கு பொலிஸ் நிலையத்தில் வகுப்பு!


முகக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியே வகுப்புகளை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கமைய முக்கவசங்கள் இன்றி பயணிக்கும் மற்றும் முகக்கவசங்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை வகுப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மேல் மாகாணத்தில்  முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 3061 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணியாமை தொடர்பாக 2093 பேரும் சமூக இடைவெளியை பின்பற்றாத 968 பேரும் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments