உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றின் கதவில் சிறிதரனின் ஆதரவாளர்கள் சுவரொட்டியை ஒட்ட முனைந்த போது, வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனால் இரு தரப்பிற்கும் தர்க்கம் உச்சமாக, கோபமடைந்த ஆதரவாளர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வீட்டின் உரிமையாளரை தாக்கி, அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். அத்துடன் வீட்டின் சொத்துக்களிற்கும் சேதம் விளைவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண்மணி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என உறுமல் செய்திகள் இன்று காலை செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், அக் குற்றசாட்டை சிறிதரன் தரப்பு மறுத்துள்ளது.
அது தொடர்பில் சிறிதரன் தரப்பினர் தெரிவிக்கையில்,
உருத்திரபுரம் பகுதியில் தமது ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்திரகுமாரின் ஆதரவாளர் ஒருவர் தமது ஆதரவாளர்களை கூரிய ஆயுதங்களால் தாக்க முனைந்தார்.
குறித்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முறைப்பாடு செய்ய தமது ஆதரவாளர்கள் இருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற போது, இருவரையும் பொலிசார் தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தொலைபேசி மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து கைதுசெய்துள்ளனர்
முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பொலிஸ் செல்வாக்கினை பயன்படுத்தி போலியான ஒரு முறைப்பாட்டை தொலைபேசி மூலம் வழங்கியதனை தொடர்ந்தே தமது தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தாக்குதல் நடத்திய சந்திரகுமாரின் ஆதரவாளர் பலமுறை ஊர் மக்களுடன் தகராறு மற்றும் தாக்குதல் செய்து பொலிஸ் நிலையம் சென்ற போது தனது மனைவியை தாக்கியதாக பலமுறை பொய் முறைப்பாடு வழங்கும் நபர் என தெரிவித்தனர்.
காலை உறுமல் செய்தியில் வெளியான செய்தி இணைப்பு







No comments