தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் மதத் தலைவர்களை இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பில் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட், தபேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இந்தக் குழுவினர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமியை
இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்புக்களின் போது சமகால அரசியல் நிலமைகள் தொடர்பிலும் தேர்தல் நிலமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.










No comments