Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் இனம் காணப்பட்ட கொரோனோ நோயாளிக்கு குறைந்தளவு தொற்றே.



சவுதி அரோபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 50 வயதான மதிக்கத்தக்க நபர் விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சுவாசப்பிரச்சினை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றவருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 
சவுதிஅரேபியாவில் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்டவர். நபர் கடந்த 11 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சுவாசப்பிரச்சினை காரணமாக 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 22 ஆம் திகதி கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் தொற்று இல்லை என அறியப்பட்ட பின்னர் 22ஆம் திகதி  மாலை விடுதியொன்றுக்கு மாற்றப்பட்டார். 
அங்கே உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 25 ஆம் திகதி காலை மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு மீண்டும் அவருக்கு சுவாசப்பிரச்சினை காணப்படுவதாக கூறி அங்கு செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை பெறப்பட்ட முடிவின்படி அவருக்கு கொரோன தொற்று குறைவான நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இவர் சிகிச்சை பெற்ற கொரோன தனிமைப்படுத்தல் விடுயொன்றிலும் மற்றும் மருத்துவ விடுதியொன்றில் தங்கியிருந்த காலப்பகுதியில் பணிபுரிந்த 4 உத்தியோகஸ்தர்களை  அவர்களது வீடுகளில் தனிமைப்படுப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை 31 ஆம் திகதி செய்யப்படும்.

விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனிமைப்படுத்தல் மையமொன்றில் இருந்து வந்த நோயாளி என்பதால் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்நிலையில் வைத்தியசாலையின் ஏனைய பணியாளர்களுக்கோ ஏனையவர்களுக்கோ தொற்றுக்கான வாய்ப்பு இல்லை என பணிப்பாளர் தெரிவித்தார். வழமைபோன்று வைத்தியசாலை பணிகள் தொடரும் என தெரிவித்தார்.

ஏற்கனவே கடற்படை சிப்பாய் என இணையத்தளங்களில் தவறான செய்திகள் வெளியாகியள்ளது. இதனை அவர் மறுத்துள்ளார்.
உறுமல் செய்திகளும் முன்னர் வந்த தகவலின் அடிப்படையில் கடற்படை வீரருக்கே தொற்று என செய்தி வெளியிட்டு இருந்தது. தவறான செய்தியை வெளியிட்டமைக்காக வாசகர்களிடம் உறுமல் செய்திகள் மன்னிப்பு கோருகின்றது

No comments