Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எல்லை தாண்டிய மீனவருக்கு கொரோனோ பரிசோதனை!


தனிப் படகில் கடற்தொழிக்குச் சென்ற மீனவர், எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் கோரோனா தொற்றை கண்டறியும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அவர், அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.

அச்சுவேலி வளலாயைச் சேர்ந்த செல்வரத்தினம் செல்வதாஸ் (வயது -35) என்பவரே இவ்வாறு வழித் தடமாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்த்து பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.

அவர் நேற்று இரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments