Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெலிமடயில் தீ விபத்து: 14 வீடுகள் தீக்கிரை- 64 பேர் பாதிப்பு

 

வெலிமட- அம்பேவல மார்ட்டின் தோட்ட குடியிருப்பு ஒன்றில் பரவிய தீயினால் 14 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள், பிரதேசத்திலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

வெலிமடை பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments