Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கோப்பாய் பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

 

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியில் கோப்பாய் பொலிஸார் மீது இன்று (திங்கட்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊரெழு போயிட்டி பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரை கைதுசெய்வதற்காக கோப்பாய் பொலிஸார் இருவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் அந்த நபரைத் தேடிய போது, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போதே பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்களினால தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments