Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு மஹிந்தவுக்கே


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஒன்றிணைக்கப்பட்டு அதன் தலைமைத்துவம் முழுமையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்கள் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், “30வருட கால யுத்தத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ம் ஆண்டு அரசியல் சூழ்ச்சிகளினால் தோற்கடிக்கப்பட்டார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமாக ஸ்தாபித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பயனற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஒன்றிணைக்கப்பட்டு தலைமைத்துவம் முழுமையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும். சுதந்திர கட்சியை பாதுகாக்கும்பொறுப்பு எமக்கும் உண்டு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடும் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவர் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயற்படுகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்து பலப்படுத்துவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்

No comments