புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்று (திங்கட்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நிதியமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
அத்தோடு அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அதேநேரம், இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சிறிபால கம்லத் மற்றும் பியங்கர ஜயரத்ன ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அத்தோடு, பல அமைச்சுகளுக்கான செயலாளர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments