Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!


யாழ்ப்பாணம், பண்ணை டெலிகொம் பின் பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்தில் இருந்து பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் சாலை வளாகத்தில் கூடாரம் ஒன்று அமைப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை குழி தோண்டிய போது அந்தக் குழியில் எலும்புக் கூடுகள் மற்றும் பெண்ணின் ஆடைகள் கிடைத்துள்ளன.

அவற்றைக் கண்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அந்தத் தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மற்றும் யாழ். பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ். மாநகர பிரதி முதல்வர், கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டனர்

அத்துடன் பொலிஸாரால் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதுடன், எலும்புக் கூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆடைகள் மற்றும் பைகள், உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏறக்குறைய 16 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments