அரச வங்கிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் மற்றும் பயனற்ற செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களை அடிப்படையாகக்கொண்டு அரச வங்கிகளில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அரச வங்கிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக பலராலும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments