Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன்?


9ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படவுள்ளார். என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. 

இன்று கூடும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்தப் பதவிக்கு மகிந்த யாப்பா அபேவரத்தன முன்மொழியப்படவுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது. குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் முன்மொழிப்படவுள்ளது. என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு வழங்குகின்றமை மரபாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments