Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு - வடக்கு கிழக்கிற்கு மறுப்பு!


 வருமானம் குறைந்ந ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு  வடக்கு கிழக்கு மாகாணத்தில் தற்சமயம் வழங்குவதில்லை என

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்து அதற்கான நேர்காணல்களையும் நடாத்தி முடித்திருந்தது. அந்நிலையில்  தற்போது வடக்கு கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதே நேரம் ஏனைய 7 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதனால் இந்த எண்ணிக்கையும் ஏனைய 7 மாகாணத்திற்கே பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 7 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது.

இதேநேரம் குறித்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 626 பேரும் , கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும் , மன்னாரில் ஆயிரத்து 830 பேரும் , முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.நிலையிலையே அதனை இடை நிறுத்துமாறு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

  இதேநேரம் வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தே்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

No comments