Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீர்கொழும்பில் துப்பாக்கி உற்பத்தி செய்யும் நிலையம் சுற்றிவளைப்பு


 நீர்கொழும்பு- நால்ல பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போதே குறித்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் 68 கைகுண்டுகள், பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களின் சீருடைகளையும் குறித்த இடத்தில் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments