ஜோ பைடன் தனது முதல் 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தமது திட்டம் தொடர்பில், இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது 100 நாட்கள் திட்டத்தில், தொற்றை முழுமையாக ஒழிக்க முடியாது என தெரிவித்துள்ள பைடன், அது தொடர்பில் உறுதியளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
எனினும், 100 நாட்களில் நோயின் தன்மையை மாற்ற முடியும் எனவும் அமெரிக்க மக்களின் வாழ்வை மாற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்பின் நிர்வாகத்தினால் கொரோனா ஒழிப்பிற்கான சிறந்த திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தமது பாரிய திட்டத்தின் சில விடயங்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, தடுப்பு மருந்து தேவையான அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவை நிச்சயமாக வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்









No comments