Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் 56 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது!



கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த ரஷ்ய அரசாங்கம் தயாராகியுள்ளது.

முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை 21 நாட்கள் இடைவெளியில் இருதடவைகள் செலுத்த வேண்டும் என்பதால், 42 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என ரஷ்யாவின் பிரதிப் பிரதமர் டாட்யானா, கோலிகோ கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், முதலாவது தடுப்பூசி போட்டபின்  42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா   தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்  என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments