ஹைதராபாத்திலுள்ள இரண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து, 64 வெளிநாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
பாரத் பயோ டெக் மற்றும் பயோலொஜிக்கல் என்ற இரு நிறுவனங்களிலும் தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், பல நாடுகள் தடுப்பூசிகளைத் தயாரித்து வந்தாலும், உலக மக்களுக்கு தேவைப்படும் அளவுக்கான தடுப்பூசிகளை இந்தியாவால் மட்டுமே உற்பத்திசெய்ய முடியும் என இந்தியாவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், கொரோனா தடுப்பூசி விநியோகத் திட்டத்தைக் கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments