Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்து ஆராய மேலுமொரு குழு நியமனம்



மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 104 பேர் காயமடைந்து றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நீதியமைச்சினாலும் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் குழுவொன்றும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மஹர சிறைச்சாலை பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண விலகியதை அடுத்து, அந்த இடத்துக்கு பொலிஸ் அத்தியட்சகர் லலிந்த ரணவீர நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments