யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக, சுமார் 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இடைந்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு ஏற்பட்ட கடும் காற்று காரணமாகவே இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும்,சுமார் 50 வீடுகள் சேதமாகியுள்ள அதேவேளை 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீன்பிடி உபகரணங்கள் பல சேதமாகியுள்ளதாக குறித்த பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.









No comments