Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 80 பேருக்கு கொரோனா



பாணந்துறை – ஹொரண மார்க்கத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களும் பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களில் 80 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

No comments