பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் நின்ற நிலையில் பயணம் செய்வது தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இலங்கை பொலிஸாருக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
அதன்படி, பயணிகள் போக்குவரத்தின்போது இருக்கை வசதிக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை கொண்டு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தகைய வாகனம் செல்லும் போது எந்த பயணிகளும் நின்ற நிலையில் பயணிக்ககூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments