கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதன வசதிகள் அடங்கிய 5 கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் தனிப்பட்ட நன்கொடையாக இந்த கொள்கலன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த குளிர் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த 5 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதியமைச்சிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது







No comments