Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் புரேவி புயலினால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்தார் அரசாங்க அதிபர்



 யாழ்ப்பாண மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு பகுதியை அம்மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை), நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி மற்றும் நெடுந்தீவு பிரதேச உத்தியோகத்தர்கள் களவிஜயம் செய்து, புரேவி புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச மக்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச பொது அமைப்புகளுடன் கலந்துரையாடினார்.

இந்த களவிஜயத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களது பிரச்சினைகள், நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மக்களது போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் துறைமுகத்தை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் கடலரிப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments