Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது



 கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி- இயக்கச்சி, பனிக்கையடி எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் சில வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தயானுஜன் அம்பிகா (35 வயது), சிங்கராஜா தயானுஜன் (29 வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது 67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை  கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments