தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
புரவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாவட்டங்கள் உட்பட தமிழ் நாட்டின் பல பகுதிகளில் புரவி புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழகத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிலவும் சூழல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி ஊடாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், அனர்த்த நிலைமையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளதுடன் மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.









No comments