இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
,இதேநேரம், நாட்டில் நேற்று மட்டும் 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து நூறாக அதிகரித்துள்ளது.
அவர்களில் 24 ஆயிரத்து 867பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், இன்னும் ஒன்பதாயிரத்து 79 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments