காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதி பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அக்கரைப்பற்று – பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றது. 35 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் உறவினர் ஒருவரே கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..









No comments