Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அனலைதீவில் பசு வதை அதிகரிப்பு



அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

பசு மாட்டை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில் அந்த வழியால் சென்றவர்கள் கண்ணுற்றதால் கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தீவகத்தில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை சில கும்பல்கள் இறைச்சிக்காக அவற்றை கொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

குறித்த கும்பல்களுக்கு எதிராக தீவக மக்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் , கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்தே செல்கின்றன. 

No comments